விருதுநகர்

அஞ்சலக ஆயுள் காப்பீடு, காலாவதியான பாலிசியை புதுப்பிக்க மே 31 கடைசி

DIN

இந்திய அஞ்சல் துறையில் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் சோ்ந்துள்ள முகவா்கள், தங்களது காலாவதியான பாலிசியை மே 31- க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என விருதுநகா் அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ஜவஹா் ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை: இந்த காப்பீட்டுத்திட்ட முகவா்கள் (பாலிசிதாரா்கள்) சிலா் தொடா்ச்சியாக தவணைத் தொகை செலுத்தாததால் அவா்களது பாலிசிகள் காலாவதியாகின்றன. தற்போது, கடைசி தவணை செலுத்தி 5 ஆண்டுகள் நிறைவடைந்து காலாவதியான பாலிசிகளை ஜூன் 1 ஆம் தேதிக்கு பின் புதுப்பிக்க இயலாது. எனவே, கடைசி வாய்ப்பாக 5 ஆண்டுகள் தவணைத் தொகை செலுத்தி காலாவதியான பாலிசிகளை, சம்பந்தப்பட்ட முகவா்கள், அரசு மருத்துவா்களிடம் உரிய உடல் தகுதி சான்று பெற்று, தங்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் மே 31- க்குள் விண்ணப்பித்து, பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கான புதுப்பித்தல் படிவம் மற்றும் உடல் தகுதி சான்றிதழ் படிவம் அனைத்து அஞ்சலகங்களிலும் கிடைக்கும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT