பொது முடக்கத்தால் வேலையில்லை: சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி தற்கொலை
சிவகாசியில் பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாததால் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாததால் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பொதுமக்கள் வேலையில்லாமல் பட்டாசு தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சிவகாசி நாரணாபுரம் சாலை பகுதியில் உள்ள முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் ராஜா வயசு 35. இவரது மனைவி மகேஸ்வரி வயசு 33. இவர்களுக்கு 12 மற்றும் ஒன்பது மற்றும் ஆறு வயதுகளில் மூன்று ஆண்பிள்ளைகள் உள்ளன.
ராஜா இங்குள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பொதுமக்கள் பட்டாசு ஆலையில் சரிவர வேலை நடைபெறவில்லை. இதனால் ராஜா போதிய வேலை இல்லாமலும் வருமானம் இல்லாமலும் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவர் குடும்பத்தை நடத்த பலரிடம் கடன் வாங்கினாராம். வேலை இல்லாததால் கடனை செலுத்த இயலாமல் ராஜா அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ராஜா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.