முகப்பு
விருதுநகர்

சுதந்திரதின விழா: கட்டைக்கால் மூலம் 10 கி.மீ நடந்த பள்ளி மாணவர்

கட்டங்குடி கிராமத்திலிருந்து தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் நாட்டுப்புறக்கலையான கட்டைக்கால் மூலம் 10 கி.மீ தூரம் நடந்து சுதந்திரதின விழாவை  பள்ளி மாணவர் ராம்குமார்(13)  சிறப்பித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
கட்டைக்கால் மூலம் கி.மீ தூரம் நடந்த மாணவர் ராம்குமார்
பகிர்:

கட்டங்குடி கிராமத்திலிருந்து தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் நாட்டுப்புறக்கலையான கட்டைக்கால் மூலம் 10 கி.மீ தூரம் நடந்து சுதந்திரதின விழாவை  பள்ளி மாணவர் ராம்குமார்(13)  சிறப்பித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ராம்குமார்(13). சுதந்திரதினவிழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுப்புறக்கலையை சிறப்பிக்கும் விதமாக இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி 10 கிலோமீட்டர் தூரம் கட்டைக்காலில் நடந்து சனிக்கிழமை சிறப்புச் சாதனை படைத்துள்ளார்.

கட்டங்குடி கிராமத்தில் ஆசிரியர் வெற்றிவேல் என்பவர் பால்சிலம்பம் எனும் பயிற்சிப்பள்ளியை நடத்தி வருகிறார். இவரிடம் சிலம்பம் கற்கும் மாணவரான கட்டங்குடியைச் சேர்ந்த ராம்குமார்(13) எனும் மாணவர் நாட்டுப்புறக்கலையான கட்டைக்காலில் அதிக தூரம் நடந்து சாதனை படைக்க விருப்பம் கொண்டிருந்தார். அம்மாணவரின் விருப்பத்திற்கு ஆசிரியர் வெற்றிவேல் உறுதுணையாக இருந்து கட்டைக்காலில் நடக்கும் கலைஞர் மூலம் ராம்குமாருக்கு தேவையான, உரிய பயிற்சியை அளித்து உதவினார்.

இதன்படி இந்திய சுதந்திர தின நன்னாளில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், நாட்டுக்காக இராணுவத்தில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், சனிக்கிழமை தனது கைகளில் தேசியக்கொடியை ஏந்தியபடி கட்டங்குடி வேலுச்சாமி கோவிலில் இருந்து கட்டைக்காலில் நடந்தார்.

உடன் சக சிலம்பாட்ட பயிற்சி மாணவர்களும் சிலம்பம், சுருள் வாள், கேடயம் ஏந்தி வாள் சுற்றுதல் ஆகிய வீர விளையாட்டுக்களைச் செய்து ஊர்வலமாக வந்தனர். இவ்விதம் மாணவர் ராம்குமார் அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வரையிலான 10 கிலோமீட்டர் தொலைவைக் கட்டைக்கால் மூலம் கடந்து புதிய சாதனையைச் செய்தார்.

அவரது முயற்சியைப் பள்ளி ஆசிரியர்கள், கிராமத்தினர் உள்ளிட்ட பொதுமக்களும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →