முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்

சுதந்திர தின விழாவையொட்டி விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி
பகிர்:

சுதந்திர தின விழாவையொட்டி விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை வழங்கினார். அதேபோல் கரோனா தடுப்பு பணியில் களப்பணி ஆற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 811 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. பெருமாள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →