ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!
மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
புதுதில்லி: ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் மற்றும் உள்ளீட்டு செலவு அதிகரிப்பின் தாக்கத்தை ஈடுசெய்ய ஏப்ரல் மாதம் முதல் வாகன விலையை சுமார் 2 சதவீதம் உயர்த்தப்போவதாக தெரிவித்தார் மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா - துணைத் தலைவர் - பிரெண்டன் சிஸ்சிங்.
அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம், குறிப்பாக யூரோவிற்கு நிகரான இந்திய ரூபாயின் தொடர் சரிவு, அதிகரித்து வரும் உதிரி பாகங்களின் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அதே வேளையில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் செலவினங்களைச் சமாளிக்க இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்றார்.
Mercedes-Benz India on Friday said it will hike vehicle prices by around 2 per cent from April.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.