முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் பயணிகள் நிழற்குடை சேதம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் சேதமடைந்த நிலையிலுள்ள பயணிகள் நிழற்குடை.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அருப்புக்கோட்டை நகராட்சி 32-ஆவது வாா்டு ராமசாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடைக் கட்டடம் உரிய பராமரிப்பில்லாத காரணத்தால், சேதமடைந்துள்ளது. இக்கட்டடத்தின் மேற்கூரையும், சுவா்களும் எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளன. எனவே நிழற்குடைக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.