முகப்பு
விருதுநகர்

கோவிலாங்குளம் பெரியகண்மாயின் கால்வாயைத் தூர்வார வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம் கிராமத்தில் நிலத்தடி நீராதாரமாக உள்ள பெரியகண்மாயின் நீர்வரத்துக்கால்வாயைப் புதர்ச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் கால்வாயைத் தூர்வார கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
கோவிலாங்குளம் பெரிய கண்மாய்க்கு வரும் நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்துள்ள புதர்ச்செடிகள்  
பகிர்:

அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம் கிராமத்தில் நிலத்தடி நீராதாரமாக உள்ள பெரியகண்மாயின்  கால்வாயைப் புதர்ச் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், அதனைத் தூர்வார கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையை அடுத்த கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள பெரியகண்மாய்க்கு பல நீர்வரத்துக் கால்வாய்கள் உள்ளன. அவற்றில் அக்கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையோரம் அளவில் பெரிய நீர்வரத்துக் கால்வாய் உள்ளது.இக்கால்வாயில் சிறிய தடுப்பணை அமைத்து நீரைத்தேக்கி அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

மழை அதிகம் பெய்தால் இக்கால்வாய் நிரம்பி மறுகால் பாயும் நீரானது பெரியகண்மாய்க்குச் செல்லும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த வரத்துக் கால்வாயானது ஒரே நேரத்தில் விவசாயிகளுக்கும் பயன்படுகிறது.அதேவேளையில் இக்கால்வாயிலிருந்து கண்மாய்க்கும் நீர் செல்வதால் நிலத்தடி நீராதாரத்திற்கும் பெரும் துணையாக இருக்கிறது.

இதனிடையே இவ்வரத்துக் கால்வாயிலும் அதிலிருந்து பெரிய கண்மாய்க்கு நீர் செல்லும் பாதையிலும் பெருமளவில் புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவை பெரிய கண்மாய்க்குச் செல்லும் நீர்வரத்தைத் தடுத்துவிடுவதால்,இப்பகுதி குடியிருப்புகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

சாதாரணமாக 50 முதல் 80 அடி ஆழத்திலேயே ஆழ்துளைக்கிணற்றில் முன்பெல்லாம் நிலத்தடிநீர் கிடைக்கும்.தற்போது சுமார் 180 முதல் 200 அடி ஆழம்வரை நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டதாக இப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகவே நிலத்தடி நீராதாரமாக விளங்கும் பெரியகண்மாய்க்கான பிரதான நீர்வரத்துக் கால்வாயை விரைவில் தூர்வாற வேண்டுமென குடியிருப்புவாசிகளும்,விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →