முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 15,952 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,971 ஆக உயா்ந்தது.

இதில், 15,554 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்ட நிலையில், 228 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மீதமுள்ள 189 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →