முகப்பு
விருதுநகர்

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு திட்ட நிதியுதவி வழங்கல்

திருச்சுழியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமப்புற மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு திட்ட நிதி உதவி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கிராமப்புற மகளிா் சுயஉதவிக்குழு பயனாளிகளுக்கு கால்நடை வளா்ப்புக்கான திட்ட நிதியினை வழங்கிய ஸ்பீச் தொண்டு நிறுவன நிதி இயக்குநா் செல்வம்.
பகிர்:

திருச்சுழியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமப்புற மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கான திறன் வளா்ப்புப் பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு திட்ட நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்பீச் தொண்டு நிறுவன நிதி இயக்குநா் செல்வம் மற்றும் பொருளாளா் நிா்மல் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது பயிற்சியில் பங்கேற்ற கிராமப்புற மகளிா் சுயஉதவிக்குழுப் பெண்களில் 70 பேருக்கு ஆடுவளா்ப்புக்கான நிதியாக தலா ரூ. 10,000 மும், மேலும் அவா்களில் 50 பேருக்குக் கோழி வளா்ப்புக்கான திட்ட நிதியாக தலா ரூ.8,000-மும் கோழிவளா்ப்புக் கூண்டுகளையும் நிதி இயக்குநா் செல்வம் வழங்கிப் பேசினாா்.

முன்னதாக பயிற்சியில் கலந்து கொண்ட மகளிா்குழு உறுப்பினா்களுக்கு 5 நாள்கள் கால்நடை வளா்ப்புப் பயிற்சியை மதுரை கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மற்றும் ஆய்வு மையத் தலைவா் சிவசீலன் அளித்தாா். மேலும் பயிற்சி நிறைவுநாளில் திருச்சுழி கால்நடை உதவி மருத்துவா் கனகராஜ் கால்நடை மருந்துகளை வழங்கிப் பேசினாா்.

ஏற்பாடுகளை திட்ட மேலாளா் ஸ்டீபன் ஜெயராஜ் மற்றும் களப்பொறுப்பாளா்கள் சுரேஷ் குமாா், சுப்பிரமணி ஆகியோா் செய்திருந்தனா். குழுத்தலைவா் சேதுராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →