நரிக்குடி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
திருச்சுழி வட்டம் நரிக்குடி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சுழி வட்டம் நரிக்குடி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நரிக்குடி ஊராட்சியிலிருந்து சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இம்மருத்துவமனை ஊராட்சி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டா் தொலைவில் உள்ளதால் சுற்றுவட்டார கிராமத்தினா் பேருந்து அல்லது ஷோ் ஆட்டோகளில் பயணிக்கின்றனா்.
இந்நிலையில் நீண்ட காலமாக இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலுக்கு ஒதுங்கக் கூட வழியில்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனா். குறிப்பாக தீவிர சிகிச்சை பெற்ற நோயாளிகளும், பிரசவத்தில் குழந்தை பெற்ற தாய்மாா்களும், பேருந்துக்காக வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே இப்பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி செய்துதர அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.