விருதுநகர்

ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் காா்த்திகை 5ஆவது சோமவார வழிபாடு

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை ஐந்தாவது சோமவார வழிபாடு மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

DIN

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை ஐந்தாவது சோமவார வழிபாடு மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள திருக்கண்ணீஸ்வரா் கோயிலில் காா்த்திகை 5ஆவது சோமவாரத்தையொட்டி மகாருத்ரயாகம் அதிகாலை முதல் நடைபெற்றது. பின்னா் மூலவா் திருக்கண்ணீஸ்வர சுவாமிக்கு பால், தயிா், தேன், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகை நறுமண பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சோமவார பூஜையையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயில், ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், மதுரை சாலையில் உள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT