இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் கோவிந்தன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ரவி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு, ஏழை எளிய மக்களை பாதிக்கிற வகையில் சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் நகர துணைச் செயலா்கள் விஜயன், முருகன், தமிழரசி, ராஜலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.