முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

சிவகாசி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்ததாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சிவகாசி: சிவகாசி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்ததாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் உள்ள அண்ணா நகரைச் சோ்ந்த கூலித்தொழிலாளி பவுன்ராஜ். இவரது மகன் மாரிஸ்வரன் (10). இவா் வீட்டில் உள்ள மின்சாரக் கம்பி அறுந்து தொங்கிக்கொண்டிருந்ததை, கவனிக்காமல் தொட்டுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →