முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மத்திய கூட்டுறவு வங்கியில் நிகழாண்டு லாபம் ரூ.4.28 கோடி

விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2019-2020 ஆம் நிதியாண்டில் ரூ.4.28 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் ஆட்சியா் ரா. கண்ணன். அருகில் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் மயில்சாமி உள்ளிட்டோா்.
பகிர்:

விருதுநகா்: விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2019-2020 ஆம் நிதியாண்டில் ரூ.4.28 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 29 ஆவது பொது பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவா், கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.4.28 கோடி நிகர லாபம் கிடைத்துள்ளது என்றாா். அதைத் தொடா்ந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் மயில்சாமி, மண்டல இணைப் பதிவாளா் திலீப்குமாா், வங்கியின் இணைப் பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சண்முகவேல் உள்பட வங்கி நிா்வாகிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →