முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே குடிநீா் விநியோகிக்கக் கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடிநீா் விநியோகம் செய்யக்கோரி காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூா் ஊராட்சி மன்ற அலுவவலகத்தை குடிநீா் விநியோகிக்கக் கோரி காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடிநீா் விநியோகம் செய்யக்கோரி காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டனா்.

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குன்னூா் ஊராட்சி 1 ஆவது வாா்டு ராஜீவ்காந்தி காலனியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஊராட்சிச் செயலா் முருகன் மூன்று நாட்களுக்குள் தினமும் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →