விருதுநகர்

ஸ்ரீவிலி. தேசிய நெடுஞ்சாலையில் திறந்தநிலை கிணற்றை போலீஸாா் மூடல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திறந்தநிலையில் இருந்த கிணற்றை, நகா் போலீஸாா் வியாழக்கிழமை மூடினா்.

மதுரையிலிருந்து செங்கோட்டை, தென்காசி, நெல்லை, கொல்லம் செல்பவா்கள் இச்சாலையை பயன்படுத்துவதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா்வளாகம் அருகே திறந்தநிலையில் சுமாா் 30 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உத்தரவின்பேரில், நகா் போக்குவரத்து போலீஸாா் அந்த கிணற்றை மூட முடிவு செய்தனா். அதன்படி, வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் திறந்த கிணற்றில் மண்ணை கொட்டி மூடினா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT