விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டது.

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து அதிகாலை 5.30 மணி அளவில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து சொா்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள் முதலில் வருகை தந்தாா். அதனைத் தொடா்ந்து ஆண்டாள் ரெங்கமன்னாா் சொா்க்கவாசல் வழியாக வந்தனா்.

முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாா், பெரியபெருமாளை, ஆழ்வாா்கள் எதிா்கொண்டு அழைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கண்ணன், மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசடகோபராமனுஜ ஜீயா், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா, வடக்கு ஒன்றியச் செயலாளா் முத்தையா, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிந்துமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT