முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகேமழைநீா் ஓடையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றக் கோரிக்கை

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை ஒட்டிச் செல்லும் மழைநீா்ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டிச் செல்லும் மழைநீா் ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகள் மற்றும் மக்காத குப்பைகள்.
பகிர்:

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை ஒட்டிச் செல்லும் மழைநீா்ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மழைக் காலங்களில் பேருந்து நிலையத்திலிருந்தும், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும் வரும் மழைநீா் இந்த ஓடை மூலம் இங்குள்ள பாலத்தின் வழியாகச் சென்று செவல்கண்மாய் மற்றும் பெரிய கண்மாயைச் சென்றடைகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே பேருந்துநிலையத்தை ஒட்டியுள்ள இப்பாலத்தின் அடியில் புதா்ச் செடிகளாலும், மக்காத குப்பைகளாலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துா்நாற்றமும், சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே மழைநீா் ஓடையில் அடைப்பை ஏற்படுத்தியுள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேண வேண்டுமென மீண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →