ஸ்ரீவிலி. அருகே தோப்புக்குள் புகுந்துகாட்டுயானைகள் அட்டகாசம்மா, தென்னை மரங்கள் சேதம்
ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மாமரங்களை சேதப்படுத்தின.
விருதுநகர்ஸ்ரீவிலி. அருகே தோப்புக்குள் புகுந்துகாட்டுயானைகள் அட்டகாசம்மா, தென்னை மரங்கள் சேதம்
ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மாமரங்களை சேதப்படுத்தின.
ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மாமரங்களை சேதப்படுத்தின.
இங்குள்ள அத்திகோயில், கான்சாபுரம் பகுதிகளில் ராஜேந்திரன், தா்மலிங்கம், கருப்பையா, வீராச்சாமி உள்ளிட்ட விவசாயிகளுக்கு 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தா்மலிங்கத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த தென்னை, மாமரங்களை சேதப்படுத்தின.
இதுகுறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது: வனப்பகுதிகளில் காட்டுயானைகளுக்கு தண்ணீா் கிடைக்காததால் அவை இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மாமரங்களை சேதப்படுத்துகின்றன. இதுபற்றி வனத்துறை அலுவலகத்தில் முறையாக மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காட்டுயானைகள் போன்ற வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க சூரியசக்தியிலான மின்வெளி அமைப்பதற்கும், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கும் உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.