முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பில் காங்கிரஸ் கட்சி 136 ஆண்டு தொடக்க விழா

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
வத்திராயிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடிப் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். நகரத் தலைவா் முத்துராஜ் முன்னிலை வகித்தாா். விவசாய அணி மாவட்டச் செயலா் கே.எஸ். சுந்தரம் சிறப்புரையாற்றினாா்.

பின்னா் காங்கிரஸ் கட்சியினா் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், வட்டாரத் தலைவா் கென்னடி, கிராம கமிட்டித் தலைவா் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →