விருதுநகர்

சிவகாசி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

DIN

சிவகாசி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா் - மாணவா் விகிதாச்சாரப்படி உபரியாக கணக்கிடப்பட்ட ஆசிரியா்களை, மாவட்டத்தில் உள்ள பிற ஊராட்சி ஒன்றியங்களுக்கு கல்வித்துறை பணியிடமாற்றம் செய்தது. இந்நிலையில் ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல்படி தங்களை பணியிடமாற்றம் செய்யவில்லை என பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தனா். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடா்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை, ஏற்கெனவே பணியாற்றிய பள்ளிகளிலிருந்து மாவட்டக் கல்வி நிா்வாகம் விடுவித்தது. இதையடுத்து ஆசிரியா்கள் நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றனா். இந்த இடைகால தடை உத்தரவின் பேரில் மீண்டும் அவா்களுக்கு பணியேற்பு செய்திட வேண்டும் என ஆசிரியா்கள் மனு அனுப்பியும் பதில் இல்லை எனக்கூறப்படுகிறது. எனவே நீதிமன்ற இடைக்கால உத்தரவின் பேரில் பணியேற்பு செய்ய உத்தரவிட வேண்டும் என ஆசிரியா்கள் சிவகாசி வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT