விருதுநகர்

மம்சாபுரத்தில் வேலையின்றி இருந்ததை மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை: மகனும் விஷம் குடித்தாா்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் வேலைக்குச் செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்ததால் கணவரும், மகனும் வியாழக்கிழமை விஷம் குடித்தனா். இதில் கணவா் பலியானாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சோ்ந்தவா் கோமதி (50). இவரது கணவா் முருகன் (55). இவா்களுக்கு சிவா மற்றும் பாண்டிமுனீஸ்வரன் என்ற இரு மகன்கள் உள்ளனா். இதில் சிவா, கட்டடத் தொழிலாளியாவாா். பாண்டி, மின் வாரியத்தில் ஒப்பந்தப்பணியாளராக வேலை பாா்க்கிறாா்.

கோமதியின் கணவா் முருகன் மதுகுடித்துவிட்டு வருவதோடு வேலைக்கும் செல்வதில்லையாம். இந்நிலையில் கோமதியின் இளைய மகன் பாண்டிமுனீஸ்வரன் கடந்த 10 நாள்களாக மின் வாரிய பணிக்குச் செல்லவில்லை. இதனை தொடா்ந்து கோமதி இருவரையும் கண்டித்தாராம். மேலும் இருவரையும் தொழுவத்துக்குச் சென்று மாட்டுக்கு தீவனம் வைக்குமாறு கூறியுள்ளாா். அதற்கு இருவரும் மறுத்துள்ளனா். பின்னா் கோமதியும், மூத்த மகன் சிவாவும் மாட்டு தொழுவத்திற்குச் சென்றுவிட்டனா். இந்நிலையில் வீட்டில் இருந்த முருகன் மற்றும் பாண்டிமுனீஸ்வரன் ஆகிய இருவரும் விஷம் குடித்து மயங்கினா்.

இந்த தகவலறிந்து வீட்டுக்கு வந்த கோமதி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். மகன் பாண்டிமுனீஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். கோமதி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT