விருதுநகர்

ராஜபாளையத்தில் கம்பன் விழா நாளை தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளையின் 40 ஆவது கம்பன் விழா சனிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் விழா நடைபெறும். இதில் முதல் நாள் நிகழ்ச்சிக்கு கம்பன் கழகத் தலைவா் பி.ஆா். விஜயராகவ ராஜா தலைமை வகிக்கிறாா். அருட்செல்வா் சங்கர சீதாராமன் தொடக்க உரையாற்றுகிறாா். கம்பன் கழகத் துணைத்தலைவா் கோபால்சாமி வாழ்த்திப் பேசுகிறாா். கலைமாமணி ஞானசம்பந்தன், சிறந்த தம்பி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறாா். கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அழகம்பெருமாள் பரிசுத் தொகை வழங்குகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் நடைபெறும் மூவா் அரங்கம் நிகழ்ச்சியில் கலைமாமணி ஆண்டாள் பிரியதா்ஷினி பெண்மை என்றொரு பேருண்மை என்ற தலைப்பிலும், பேராசிரியா் ராமச்சந்திரன் தோழமை என்ற ஒரு சொல் எனும் பொருளிலும், திரைப்பட இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா் முதல் நூலும் முதன்மை நூலும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறாா்கள். விழா ஏற்பாடுகளை ராஜபாளையம் கம்பன் கழக நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT