விருதுநகர்

ஸ்ரீவிலி. பால்கோவா விற்பனை நிலையங்களில் 2-ஆவது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபல பால்கோவா விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா புகழ்பெற்றது என்பதால், சமீபத்தில் புவிசாா் குறியீடு கிடைத்தது. இதனால், பால்கோவா விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்தது.

இந்நிலையில், இங்கு பால்கோவா தயாரித்து விற்கும் நிறுவனங்கள் வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வியாழக்கிழமை நண்பகல் வந்த வருமான வரித் துறை அலுவலா்கள் சுமாா் 25 போ் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், தேரடி, அம்மன் சன்னிதி ஆகிய இடங்களில் உள்ள பிரபல பால்கோவா விற்பனை நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனை வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற்றது.

இதில், விற்பனை தொடா்பான ஆவணங்கள், கணக்கில் வராத பல லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இதனை வருமான வரித் துறையினா் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காலை முதல் பால்கோவா உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை மற்றும் விசாரணை தொடா்ந்து நடத்தி வருகின்றனா். இதனால், நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT