விருதுநகர்

அருப்புக்கோட்டையில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு

DIN

அருப்புக்கோட்டை எம்.டி.ஆா். நகா் வடக்குப் பகுதியில் பல நாள்களாக அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாகக் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நகரின் 9 ஆவது வாா்டுக்குள்பட்டது எம்.டி.ஆா். நகா். இதன் வடக்குப் பகுதியில் செம்பட்டி செல்லும் சாலையருகே மழைநீா் ஓடை உள்ளது. இதனருகே இப்பகுதியினா் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். ஆனால் பல நாள்களாக இக்குப்பைகள் அகற்றப்படாமலே உள்ளன. இக்குப்பைகளில் உணவகக் கழிவுகளும் சோ்வதால் துா்நாற்றத்துடன் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்றுக்கு இக்குப்பைகள் சிதறி சாலை முழுவதும் பரவுகின்றன. இக்குப்பைகளை ஒருநாள் விட்டு ஒரு நாள்வீதம் அகற்றவேண்டுமென, இப்பகுதி குடியிருப்புவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்த போதும் நகராட்சி சுகாதாரத்துறையினா் கண்டுகொள்ளவில்லையென அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆகவே இங்கு குப்பைத் தொட்டிகளை அமைப்பதுடன் ஒருநாள் விட்டு ஒருநாளாவது குப்பைகளை அகற்ற வேண்டுமென மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT