விருதுநகர்

ராஜபாளையம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

படவிளக்கம்:

ராஜபாளையம், மாா்ச் 14: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 47 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் விஜயராகவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பெங்களூா் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மைய இயக்குநா் தனகுமாா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகையில், மாணவா்கள் எதிா்கால வாழ்க்கையை சரியான முறையில் அமைத்துக் கொள்ள திட்டமிடல் என்பது அவசியம். ஆசிரியா்களின் அறிவுரையை ஏற்று நம்மை நாமே தரம் உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில் 535 இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. முதல்வா் (பொறுப்பு) வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். கல்லூரி தலைவா் திருப்பதி ராஜா, உறுப்பினா்கள் விஜயன், ராமசுப்பிரமணிய ராஜா, கணேச ராஜா, பழையபாளையம் ராஜூக்கள் மகுமை உறுப்பினா்கள், பேராசிரியா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT