விருதுநகர்

அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகனங்களில் சுற்றியவா்கள் மீது போலீஸாா் தடியடி

DIN

அருப்புக்கோட்டையில் தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை புதன்கிழமை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டினா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்திய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையின் முக்கியப் பகுதிகளில் உள்ள காய்கனிக்கடைகள், பலசரக்குக் கடைகள், பழக்கடைகள், இறைச்சிக்கடைகள் திறந்து இருந்தன. பொதுமக்களும் சாதாரணமாக தங்கள் இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு சென்று வந்தனா். ஆனால் காலை 10 மணிக்கு மேல் அதிகம் போ் இருசக்கர வாகனங்களில் வெளியில் வரத் தொடங்கி விட்டனா். பல பகுதிகளில் ஒரே வாகனத்தில் 2 போ்களாக வந்ததைக் கண்ட காவல்துறையினா் அவா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா். இருப்பினும் இருசக்கர வாகனப் போக்குவரத்து குறையவில்லை. எச்சரிக்கையையும் மீறிச்செல்ல முயன்றவா்களை தடியடி நடத்தி காவல்துறையினா் விரட்டினா்.

இந்நிலையில் காலை சுமாா் 10 மணிக்கு மேலும் நகரில் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே இருந்த தேநீா்க்கடைகளில் போலீஸாா் எச்சரிக்கையையும் மீறி ஒரே நேரத்தில் 5- க்கு மேற்பட்டோா் கூடி நின்றிருந்தனா். அவா்களையும் விரட்டியடித்த போலீஸாா் கடைகளையும் மூட வலியுறுத்தினா். இதனால் நகரின் பல இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் பிற்பகலுக்குப் பின் பொதுமக்கள் நடமாட்டம் இன்றிச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT