விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மன்னா்திருமலை நாயக்கா் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகவும், அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், உணவுப் பொருள்கள் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், அங்கு சென்ற உணவுப் பாதுகாப்பு அலுவலா் சந்திரசேகா், வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குநா் சங்கீதா, வட்ட வழங்கல் அலுவலா் வடிவேலு, வருவாய் ஆய்வாளா் பால்துரை மற்றும் காவல் துறையினா் சோதனையிட்டனா். அப்போது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

அதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், நவநீதிகிருஷ்ணன் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT