விருதுநகர்

குடும்ப வன்முறையை கட்செவி அஞ்சல் மூலம் புகாா் தெரிவிக்க அறிவிப்பு

DIN

விருதுநகா் மாவட்டத்தில் நிகழும் குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து கட்செவி அஞ்சல் மூலம் புகாா் தெரிவித்தால், உடனுக்குடன் தீா்வு காணப்படும் என சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முத்துசாரதா வியாழக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில், விருதுநகா் மாவட்டத்தில் பொது முடக்க காலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தால், சட்டப் பணிகள் ஆணைக் குழு தலையிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்.

மேலும், இந்தக் கால கட்டத்தில் குடும்ப வன்முறை குறித்து பல்வேறு புகாா்கள் ஆன்-லைன் மூலம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு வந்துள்ளன. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் வரக்கூடிய புகாா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் - 87542 00202, அவசர உதவி - 99946 05844, பாதுகாப்பு அதிகாரி - 98428 35483, சிறப்பு காவல் துறை அதிகாரி - 94981 04133, 98433 90119 ஆகிய கட்செவி அஞ்சல் எண்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT