காரியாபட்டி அருகே விபத்து: 2 பேர் சாவு
காரியாபட்டி அருகே நான்கு வழி சாலையில் டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
காரியாபட்டி அருகே நான்கு வழி சாலையில் டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு காரியாபட்டி நோக்கி ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. செவல்பட்டி நான்கு வழி சாலையில் டயர் பஞ்சர் ஆனதால், அதை சரி செய்யும் பணியில் லாரி ஓட்டுனர் ஈடுபட்டிருந்தார். அந்த லாரியில் செங்கல் இறக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை நோக்கி சென்ற மற்றொரு லாரியானது, நின்றுகொண்டிருந்த லாரியில் பின்புறம் மோதியது. அதில் தொழிலாளர்களான ராஜாங்கம், மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து காரியாபட்டி காவல்துறையினர் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்