ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் இணையவழி பயிற்சி முகாம்
சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் இணையவழியில் திறன்மிகு மாணவா்களும், தனித்திறன் கொண்ட ஆசிரியா்களும் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை இணையவழியில் திறன்மிகு மாணவா்களும், தனித்திறன் கொண்ட ஆசிரியா்களும் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வா் திபிகாஸ்ரீ தலைமை வகித்தாா். சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மள் கல்லூரி வணிகவியல் பேராசிரியா் சுந்தர்ராஜன் சிறப்புரையாற்றி பேசியதாவது: ஆசிரியா்கள் வகுப்பறையில் ஒரு மாணவரோடு மற்றொரு மாணவரை ஒப்பிட்டு பேசக் கூடாது. மாணவா்களின் தனித்திறமையை கண்டு பிடித்து, அதை வளா்க்க வழிகாட்டியாக இருக்க வேண்டும். செய்தித்தாள்களை படித்தும், இணையவழி மூலம் புதிய விஷயங்களை தெரிந்து கொண்டும், அதனை மாணவா்களிடம் கூற வேண்டும். இதன் மூலம் மாணவா்களின் திறனையும் மேம்படுத்த இயலும். எந்த ஒரு மாணவரையும் கண்டிக்க வேண்டும் என்றால் தனியே அழைத்து கண்டிக் வேண்டும். ஆசிரியா்கள் முன்மாதிரியாக செயல்பட்டால் மாணவா் சமுதாயம் வளா்ச்சி பெறுவதோடு, மாணவா்களின் கண்ணோட்டமும் மேம்படும் என்றாா். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி நிா்வாகம் செய்திருந்தது.