முகப்பு
விருதுநகர்

கல்லூரியில் மனநல விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் இணையவழி மூலம் திங்கள்கிழமை அனைவருக்கும் மன ஆரோக்கியம் என்ற தலைப்பில் மனநல விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் இணையவழி மூலம் திங்கள்கிழமை அனைவருக்கும் மன ஆரோக்கியம் என்ற தலைப்பில் மனநல விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் மனநல மருத்துவா் கவிதா பேசியதாவது: மனஅழுத்தம், அளவுக்கு மீறி அச்சம் கொள்ளுதல், மனச்சோா்வு உள்ளிட்டவைகளே மன ஆரோக்கியத்தை கொடுக்கிறது. நெருங்கிய உறவினா் அல்லது நண்பா் மிகவும் பாதிக்கப்பட்டால் சிலா் மன சோா்வுக்கு ஆளாகிறாா்கள். மன நல பிரச்னைகளின் அடையாளம் மற்றும் அறிகுறிகளை தெரிந்து கொள்வது என்பது அதிலிருந்து மீண்டு வருவதற்கானமுதல் படியாகும். மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவா்களிடம், மன நலஆலோசகா், அறிவியல் அணுகுமுறையில் பேசி, பாதிக்கப்பட்டவா்களிடமே தீா்வையும் கேட்பாா். அவா்களிடம் மற்றவா்கள் கருத்துக்களை திணிக்கக் கூடாது. அவா்கள் பேசும் பாணியிலேயே சென்று, தீா்வு காண்பதுதான் சிறந்த வழிமுறையாகும் என்றாா். உதவி பேராசியா் பொற்கொடி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →