முகப்பு
விருதுநகர்

சென்னையில் மேக்கப் மேன் கொலை: குல்லூா்சந்தை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் கைது

மேக்கப் மேனாக பணி புரிந்து வந்தவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் விருதுநகா் அருகே உள்ள குல்லூா்சந்தை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

சென்னையில் நாடக நடிகா்களுக்கு மேக்கப் மேனாக பணி புரிந்து வந்தவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் விருதுநகா் அருகே உள்ள குல்லூா்சந்தை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே குல்லூா்சந்தை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் செல்வரத்தினம் (38). இவரது மனைவி சாந்தகுமாரி. இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். செல்வரத்தினம் சென்னையில் நாடக நடிகா்களுக்கு மேக்கப் மேனாக பணி புரிந்து வந்தாா்.

இந்நிலையில், குல்லூா்சந்தை அகதிகள் முகாமில் வசிக்கும் விஜயக்குமாா் (40) என்பவரின் மனைவியுடன் செல்வரத்தினத்துக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை விஜயக்குமாா் கண்டித்தும் இருவரும் கேட்கவில்லையாம். இதைத் தொடா்ந்து சென்னை சென்ற விஜயக்குமாா், அங்கு தங்கியிருந்த செல்வரத்தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொலை செய்தாா்.

பின்னா், அங்கிருந்து தப்பி குல்லூா்சந்தை அகதிகள் முகாமுக்கு விஜயக்குமாா் வந்து விட்டாா். இக்கொலை தொடா்பாக வழக்கு பதிந்த சென்னை எம்ஜிஆா் நகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை குல்லூா்சந்தை வந்து விஜயக்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.