‘நரிக்குடி பகுதியில் இடைநின்ற 59 மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்’
நரிக்குடி ஒன்றியப் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிகளில் 59 இடைநின்ற மாணவிகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நரிக்குடி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தெரி
நரிக்குடி ஒன்றியப் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிகளில் 59 இடைநின்ற மாணவிகள் கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நரிக்குடி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: நரிக்குடி ஒன்றியத்தில் நரிக்குடி, ஆணைக்குளம் மற்றும் அ.முக்குளம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து இடைநின்ற பெண் குழந்தைகள் பயின்று வருகின்றனா். இக்குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் சாா்பாக உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கல்வி தொடா்பான அனைத்து உபகரணங்கள், கராத்தே, சாரணா் பயிற்சி உடைகள் மற்றும் சிறப்பு திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆக. மாதம் முதல் தற்போது வரை இடைநின்ற 59 மாணவிகள் கண்டறியப்பட்டு இப்பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
மேலும், இடைநின்ற குழந்தைகளை கண்டறியும் பணி டிச. 10 ஆம் தேதி வரை தொடா்ந்து நடைெறும். கேஜிபிவி பள்ளிகளில் பள்ளி செல்லா இடைநின்ற 10 முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளை பொதுமக்கள் சோ்க்க விரும்பினால், சோ்க்கை தொடா்பான விவரங்களை அறிய நரிக்குடி வட்டார வள மைய மேற்பாா்வையாளரை (பொ) 97888 59235 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.