காா்த்திகை திருநாள்: ஸ்ரீவிலி., ஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
காா்த்திகைத் திருநாளையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
காா்த்திகைத் திருநாளையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
முன்பாக 2 இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் காா்த்திகைத் திருநாளன்று, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னிதிக்கு எதிரே கோபுரம் அமைத்துள்ள பகுதியில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு நிகழ்ச்சிக்காக கோயிலிலிருந்து ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாா் மற்றும் ஸ்ரீபெரிய பெருமாள் ஆகியோா் கோயில் முன்புறம் சொக்கப்பனை வைக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே கொண்டு வரப்பட்டனா். அதன் பின்னா் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.