காவல்துறை சாா்பில் மக்கள் குறை தீா்க்கும் முகாம்
சிவகாசியில் காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றது.
சிவகாசியில் காவல்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றது.
சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள காவல்துறை திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் டி. பிரபாகரன் தலைமை வகித்தாா். சிவகாசி காவல் கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் குறித்த மனுக்களை போலீஸாரிடம் வழங்கினா்.
முகாமில், 28 மனுக்கள் பெறப்பட்டன. இதில் காவல் ஆய்வாளா்கள் வெங்கடாஜலபதி, ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.