முகப்பு
விருதுநகர்

ஆமத்தூா் பகுதியில் மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்தும்காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

மக்காச்சோளப் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால்  அதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்  மனு

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

விருதுநகா் அருகே ஆமத்தூா் உள்பட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாகவும், அதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா், வெள்ளூா், மருதநத்தம், கவலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 200 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். தற்போது இப்பயிரானது வளா்ந்து மகசூல் கொடுக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க படைப்புழு தாக்கி பயிா்களை அழித்து வருகிறது. அத்துடன் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோளப் பயிா்களை மேலும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் நாங்கள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகிறோம். எனவே, காட்டுப்பன்றிகளை வனத்துறை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.