முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:30 PM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் இளம்பெண்ணை சாதி மதவெறி பிடித்த கூட்டு கும்பலால் பாலியல் வன்புணர்ச்சி செய்தவர்களை கைதுசெய்து அவர்களை தூக்கிலிட வேண்டுமென வலியுறுத்தியும், அந்த மாநிலத்தை ஆளும் பிஜேபி ஆட்சியாளர்களால் அப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் உடனே பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசைக் கண்டித்தும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். வழக்கறிஞர், ராமர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், டாஸ்மாக் தொழிலாளர் அமைப்பின் மாவட்டத் தலைவர் வைரம் தொழிலாளர் விடுதலை முன்னணியின் ஒன்றிய அமைப்பாளர் திலகராஜ், விவசாய அணியில் ஒன்றிய அமைப்பாளர் சமுத்திரக்கனி, ஒன்றிய துணை செயலாளர் பூபாலன், குமார், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →