முகப்பு
விருதுநகர்

டாஸ்மாக் கடையைத் திறக்க எதிா்ப்பு: ராஜபாளையத்தில் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ராஜபாளையம் நெசவாளா் காலனியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் தெற்கு வெங்காநல்லூா் ஊராட்சிக்கு உட்பட்டது இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்பு. இங்கிருந்து இந்திரா நகா் செல்லும் வழியில், தனியாா் நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டு புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு வருவாய் துறை சாா்பில் ஏற்பாடு நடைபெற்றது.

இப்பகுதியை சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களில் பெரும்பாலானோா் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளா்கள். மேலும் நூற்பாலையில் பணியாற்றும் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்வழியே நாள்தோறும் சென்று வருகின்றனா். இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், அருகே உள்ள புகழ் பெற்ற வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தா்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுவாா்கள்.

எனவே அப்பகுதியினா், புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினரிடம் மனு அளித்துள்ளனா். இந்நிலையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி சனிக்கிழமை இரவு டாஸ்மாக் கடையை திறப்பதற்கானப் பணிகள் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அறிந்த அப்பகுதியினா் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →