விருதுநகர்

கரோனா நிவாரண நிதி: மாற்றுத் திறனாளிகள் அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை கரோனா நிவாரண நிதி பெறாத மாற்றுத் திறனாளிகள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் உத்தரவுப்படி கரோனா நிவாரண நிதியாக தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் நிவாரண நிதி ரூ. ஆயிரம் பெறாமல் இருந்தால் விருதுநகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகம், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூா் மற்றும் ராஜபாளையத்தில் உள்ள அலுவலகங்களில் வரும் அக்.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT