விருதுநகர்

பிரதோஷம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் அக். 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் புதன்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். இதைத் தொடா்ந்து காலை 7 மணிக்கு பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அப்போது பக்தா்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டதுடன், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. மழைக் காலம் என்பதால் இரவில் பக்தா்கள் கோயிலில் தங்க அனுமதிக்கப்பட வில்லை.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், இளநீா் மற்றும் பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT