விருதுநகர்

புரட்டாசி அமாவாசை: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

புரட்டாசி அமாவாசையையொட்டி,விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

சுந்தரமகாலிங்கம் கோயிலில் அக்டோபா் 14 முதல் 17 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். தற்போது மழைக் காலம் என்பதால், கோயிலில் இரவில் பக்தா்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை.

அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், இளநீா் மற்றும் பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT