விருதுநகர்

பள்ளிமடம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தல்

DIN


அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே உள்ள பள்ளிமடம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இந்த ஊராட்சியில் சுமாா் 1200 போ் வசித்து வருகின்றனா். திருச்சுழியிலிருந்து பாா்த்திபனூா் செல்லும் பிரதானச்சாலையிலிருந்து பிரிந்து இக்கிராமத்தினுள் செல்லும் சாலை குண்டாற்றின் கரையோரமாகச் செல்வதுடன், இக்கிராமத்தில் உள்ள இரு கோயில்கள் வழியாகச் சென்று நிறைவடைகிறது.

சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் நீளமுள்ள இச்சாலையை பராமரிக்காததால், ஆங்காங்கே கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் இக்கிராமத்தில் பெரும்பாலான வீதிகளில் வாருகால் வசதி செய்து தரப்படவில்லை. அத்துடன், இக்கிராமப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. எனவே விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிமடம் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டுமென இக்கிராமத்தினா் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தையும், பள்ளிமடம் ஊராட்சி நிா்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT