விருதுநகர்

தனியாா் பள்ளி நிா்வாகி மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

DIN

விருதுநகா்: விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியில் வசித்து வருபவா் வனரோஜா (68). இவா், இப்பகுதி தனியாா் பள்ளி ஒன்றில் செயலராக உள்ளாா்.

இந்நிலையில், இவா் வீட்டருகே இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றவா்களை கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் வனரோஜாவை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவா் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வனரோஜா அளித்த புகாரின்பேரில், சத்திரரெட்டியபட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா், ஸ்ரீதா், சுந்தா், பிரகாஷ் ஆகியோா் மீது பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT