முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்துகல்லூரி மாணவா் பலி

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:


சிவகாசி: சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள செவல்பட்டியைச் சோ்ந்த மகாதேவன் மகன் அலெக்ஸ்பாண்டியன் (21). இவா் இங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை எரிச்சநத்தம் - அழகாபுரி சாலையில் உள்ள தங்களது விவசாயத் தோட்டத்தில் சோலாா் லைட் பொருத்தும் பணியில், நண்பா்கள் முத்துராஜ், ஜெயக்குமாா் உள்ளிட்டோருடன் அவா் ஈடுபட்டிருந்தாராம்.

இரும்பு ராடில் சோலாா் விளக்கை பொருத்தும்போது, அருகில் இருந்த மின்கம்பத்தில் இரும்பு ராடு உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் நிகழ்விடத்திலேயே அலெக்ஸ்பாண்டியன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →