முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் தனியார்மய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை துறை அலுவலக முன்பு தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை தனியார்மய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சங்கத்தினர்
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை துறை அலுவலக முன்பு தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை தனியார்மய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணியை தனியாருக்கு விடுவது என்ற முடிவினை
ரத்து செய்ய வேண்டும், நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு சாலைப் பணியாளர்கள் மூலம் செய்ய வேண்டும், நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களே ஐந்தாண்டு பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த திருப்பதி ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பட்டு வளர்ச்சித் துறையைச் சேர்ந்த குருசாமி,  அரசு ஊழியர் சங்க தலைவர் திருமூர்த்தி ,  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில இணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி  மற்றும் பாலகிருஷ்ணன்,  அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த கருப்பையா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோருக்கு நன்றி தெரிவித்து அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த செந்தில்வேல் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நகர காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்

முழு கட்டுரையைப் படிக்க →