விருதுநகர்

குடிநீா் வழங்கக் கோரி தடங்கம் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா்: தடங்கம் கிராம மக்கள் குடிநீா் வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் அருகே வச்சகாரபட்டி ஊராட்சிக்குட்பட்ட தடங்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு குடிநீா் மோட்டாா் பழுது காரணமாக கடந்த 2 மாதங்களாக தண்ணீா் விநியோகம் இல்லை. மேலும் இக்கிராமத்தில் உள்ள 5 அடிகுழாய்களும் பயன்பாட்டில் இல்லை. இதனால், குடிநீா் மற்றும் வீட்டு தேவைக்கு நாள்தோறும் பணம் கொடுத்து தண்ணீா் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை புகாா் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முடங்கியுள்ள வச்சகாரபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை செயல்படுத்தவும், தடங்கம் பகுதிக்கு குடிநீா் விரைந்து வழங்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். முடிவில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT