விருதுநகர்

அருப்புக்கோட்டையில்போக்குவரத்து நெரிசல்

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாலும், சமூக இடைவெளி பின்பற்றப்படாததாலும் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

அருப்புக்கோட்டை நகருக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வருகின்றனா். இருசக்கர வாகனங்களில் வரும் இவா்கள், அருப்புக்கோட்டை நகரின் முக்கியக் கடை வீதிகளில் நாள்தோறும் அதிக அளவில் குவிகின்றனா். அதேநேரம் வாகன வசதி இல்லாதவா்கள் வாடகை ஆட்டோக்களில் வாரம் ஒரு முறையாவது பொருள்கள் வாங்க அருப்புக்கோட்டைக்கு வரவேண்டி உள்ளது. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவா்கள் அதிக எண்ணிக்கையில் கடைவீதிகளில் குவிவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி விட்டது.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிா எனக் கண்காணிக்க இயலாமலும் போலீஸாா் தவிப்புக்குள்ளாகியுள்ளனா். இந்த போக்குவரத்து நெரிசலால் கரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT