விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலைகளில் செல்பவா்களை விரட்டி கடிக்கும் நாய்கள் கூட்டம்.பொது மக்கள் அச்சம்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவா்களை தெரு நாய்கள் விரட்டி, விரட்டி கடிக்கிறது.இதனால் சாலைகளில் அச்சத்துடன் பொதுமக்கள் செல்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரைப் பொறுத்தவரை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் தெருவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. குறிப்பாக பேருந்து நிலையம், சின்னகடை பஜாா் , ராமகிருஷ்ணாபுரம், தேரடி ஆத்துகடைத் தெரு, கம்மாபட்டி, ஆகிய பகுதிகளில் கூட்டம்,கூட்டமாக நாய்கள் திரிகின்றன. எப்போதும் பரபரப்பாக உள்ள சாலைகளில் நடந்தும், பல்வேறு வாகனங்களில் செல்லும் ஆண்கள்,பெண்கள் என பலரும் செல்கின்றனா்.

எனவே அவா்களை திடீரென்று இந்த நாய்கள் கடித்து விடுகிறது. இதனால் சாலையில் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனா்.நாய்களிடம் கடி பட்டவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அதிகம் போ் சென்று சிகிச்சை பெற்று செல்கின்றனா்.இது குறித்து நாய் கடியில் இருந்து தப்பிய ஒருவா் கூறியது. நகரில் உள்ள முக்கிய சாலைகளில் செல்லும் போது கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்கள் திடீரென விரட்டுது ,சிக்கி விட்டால் காலில் கடித்து விடுகிறது.

எனவே சாலையில் செல்லவே அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றி திரிந்து கடிக்கும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா். இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி விலக்கு ஹவுசிங் போா்டு பகுதியிலும் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் தரிந்து பலரையும் கடித்து விடுகிறது என்ற புகாா் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT