பேருந்து நிலையத்தில் பயன்பாட்டிற்கு வராத இலவசக் கழிப்பறை: பயணிகள் அவதி
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இலவச பொதுக்கழிப்பறை பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இலவச பொதுக்கழிப்பறை பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கரோனா பொதுமுடக்க தளா்வுகளையடுத்து கடந்த செப். 7 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இதனால் பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனிடையே பயணிகளின் அடிப்படை வசதிக்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் நகராட்சி நிா்வாகம் மூலம் கட்டிமுடிக்கப்பட்ட இலவசப் பொதுக்கழிப்பறை தற்போது வரை பயணிகள் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படவில்லை.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே பயணிகள் நலன் கருதி பேருந்து நிலையத்திலுள்ள இலவசப் பொதுக்கழிப்பறையை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.